Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் 5 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் .....சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் .....சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

By: vaithegi Fri, 17 June 2022 5:57:17 PM

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் .....சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம்: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் கடந்த கோடை காலத்தில் முதல் இருந்தே லேசான முதல் அதி கனமழை பெய்து வருகிறது. இந்த பருவ மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எப்போதும் கோடை காலம் என்றாலே வெப்பச்சலனம் அதிகமாக இருக்கும் ஆனால் இந்த ஆண்டு அசானி புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இதனை தொடர்ந்து தற்போழுது தென்மேற்கு பருவமழையும் தொடங்கி இருப்பதால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோடை காலம் வந்தாலே தண்ணீர் பிரச்சனை மிக அதிகமாக இருக்கும்.

convection,asani storm,chennai meteorological center ,வெப்பச்சலனம் ,அசானி புயல்,சென்னை வானிலை மையம்

ஆனால் இந்த வருடம் அதிகமான மழை பெய்ததால் தண்ணீர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது போல் ஆயிற்று. மேலும், இந்த வருடம் மே மாதத்தில் மற்றும் ஜூன் மாதத்தில் அதிகமான மழை பெய்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம்தகவல் தெரிவித்துள்ளது. அதாவது கடலூர்,மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர்,நாகை, ஆகிய 5 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, மற்றும் கடலூர் மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

Tags :