Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராணிப்பேட்டை மாவட்டம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய ..... சென்னை வானிலை மையம் அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய ..... சென்னை வானிலை மையம் அறிவிப்பு

By: vaithegi Thu, 16 June 2022 4:11:56 PM

ராணிப்பேட்டை மாவட்டம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய ..... சென்னை வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் கடந்த மே மாதம் முதலே இருந்து லேசான முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த பருவ மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுகிறது. இதனால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எப்போதும் கோடை காலம் என்றாலே வெப்பச்சலனம் அதிகமாக இருக்கும் ஆனால், இந்த ஆண்டு அசானி புயல் மற்றும் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது தென்மேற்கு பருவமழையும் தொடங்கியுள்ளதால் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

convection,chennai meteorological center,summer ,வெப்பச்சலனம் ,சென்னை வானிலை மையம்,கோடை காலம்

தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும்‌ வெப்பச்சலனம்‌ காரணமாக, சமீபகாலமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, நேற்று மதுரையில் இடி மின்னலுடன் மழை பெய்தது மேலும், இன்று எந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்பது பற்றிய தகவலை சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது..

வெப்பச்சலனம்‌ காரணமாக இன்று சென்னையை தொடர்ந்து பரமக்குடி,முகையூர், காவேரிப்பாக்கம் மற்றும் கள்ளுக்குடியில் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் அதிகபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் 11 செ.மீ. மழையம், பரமக்குடியில் 10 செ.மீ மழையும், முகையூர், காவேரிப்பாக்கம், கல்லக்குடியில் தலா 9 செ.மீ மழையும், அன்னவாசல், திருப்புவனத்தில் தலா 8 செ மீ மழை பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

Tags :