Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • போகி பண்டிகை ... பொதுமக்கள் பிளாஸ்டிக் எரிப்பதை தவிர்க சென்னை மாநகராட்சி தெரிவிப்பு

போகி பண்டிகை ... பொதுமக்கள் பிளாஸ்டிக் எரிப்பதை தவிர்க சென்னை மாநகராட்சி தெரிவிப்பு

By: vaithegi Sat, 07 Jan 2023 10:27:12 AM

போகி பண்டிகை ...   பொதுமக்கள் பிளாஸ்டிக் எரிப்பதை தவிர்க சென்னை மாநகராட்சி தெரிவிப்பு

சென்னை: பிளாஸ்டிக் எரிப்பதை தவிர்க வேண்டும் ... சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- போகிப் பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலுள்ள பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் மாநகராட்சி மூலம் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கொண்டு வருகின்றன.

இதையடுத்து இந்நிலையில் வருகிற 13 மற்றும் 14-ந்தேதிகளில் பொதுமக்கள் தங்களிடையே பயன்பாட்டில் இல்லாத பொருட்களான பழைய துணி, டயர், ரப்பர் டியூப் மற்றும் பிளாஸ்டிக் போன்றவற்றை எரிப்பதை தவிர்த்திடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

bogi festival,chennai corporation ,சென்னை மாநகராட்சி,போகி பண்டிகை

எனவே சென்னையிலுள்ள 1-வது முதல் 15-வது வரையிலான மண்டலங்களில் உள்ள அனைத்து வார்டுகளிலும், மக்கள் தங்களிடையே உள்ள தேவையில்லாத பொருட்களை எரிப்பதை தவிர்த்து, அவற்றை தனியாக மாநகராட்சியின் தூய்மை பணியாளர்களிடம் நாளை முதல் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதனை அடுத்து இது தொடர்பாக, பேட்டரியால் இயங்கும் 3 சக்கர வாகனங்களில் ஆடியோ மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு விளம்பர பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :