Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காலை உணவு திட்டம் குறித்து சென்னை மாநகராட்சி விளக்கம்

காலை உணவு திட்டம் குறித்து சென்னை மாநகராட்சி விளக்கம்

By: vaithegi Sat, 02 Dec 2023 2:35:43 PM

காலை உணவு திட்டம் குறித்து சென்னை மாநகராட்சி விளக்கம்


சென்னை: காலை உணவு திட்டத்தை தனியார் மூலம் செயல்படுத்த ஒப்பந்தம் கோரவில்லை .... சென்னை மாநகராட்சியில் முதல்வரின் காலைஉணவு திட்டம் தற்போது 358 பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. இதை சிறப்பாகச் செயல்படுத்த மாநகராட்சி துணை ஆணையர் (கல்வி) தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் கல்வி அலுவலர் மற்றும் தலைமை ஆசிரியர்களின் கடமைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆண்டுக்கு ரூ.19 கோடிசெலவில், தனியார் மூலம் திட்டத்தை செயல்படுத்த கடந்தமாதம் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுயிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில், முதல்வரின்காலை உணவுத் திட்டத் தின் கீழ் முன்னோடி திட்டமாக 37 பள்ளிகளில், மாநகராட்சி சார்பில் காலை உணவு தயாரித்து, தினசரிவழங்கப்பட வேண்டிய உணவுப் பட்டியலின்படி, இதற்காக அமைக்கப்பட்ட உயர்அலுவலர்கள் கொண்ட குழுவின் கண்காணிப்பில் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

chennai municipal corporation,breakfast scheme , சென்னை மாநகராட்சி,காலை உணவு திட்டம்

இதையடுத்து தற்போது இத்திட்டம் 1 முதல் 5-ம் வகுப்புவரை பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளும் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது. அதனால் மாநகராட்சியின் 358 பள்ளிகளில் 65 ஆயிரத்து 30 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், நிர்மாணிக்கப்பட்ட 35 சமையல் கூடங்களில் இருந்து, தினசரிஉணவு வழங்கப்பட வேண்டிய அட்டவணையின்படி உணவு தரமாக தயாரித்து வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இப்பணியில் உயர் அலுவலர்கள் கொண்ட குழுவின் கண்காணிப்புடன் ஒப்பந்த அடிப்படையில் காலை உணவு தரமாகத் தயாரித்து வழங்குவதற்கான நிலை ஏற்படுமாயின் அதற்கான உத்தேச மதிப்பீடுதயாரித்து அதற்கான ஒப்புதல் மாநகராட்சியின் மன்றத்தில் பெறப்பட்டது.எனவே இதற்கான ஒப்பந்தப்புள்ளி ஏதும் தற்போது கோரப்பட வில்லை. காலை உணவு திட்டம் சென்னைமாநகராட்சியில் சிறப்பாக செயல் படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டமானது தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ளப்படும் என அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags :