Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை முன்பதிவு தொடக்கம்

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை முன்பதிவு தொடக்கம்

By: vaithegi Sat, 23 Sept 2023 09:43:08 AM

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை முன்பதிவு தொடக்கம்

சென்னை: திருநெல்வேலி- சென்னை இடையே இயக்கப்பட இருக்கும் வந்தே பாரத் ரயில் நெல்லை முதல் சென்னை எழும்பூர் வரை 653 கி.மீ இயக்கப்படும். சென்னை - திருநெல்வேலி இடையே வருகிற 24-ம் தேதி முதல் இயக்கப்பட உள்ள நிலையில், வந்தே பாரத் ரயில் வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர 6 நாட்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

நெல்லையில் காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 01.50 மணிக்கு எழும்பூர் வந்தடையும் வகையிலும், சென்னை எழும்பூரிலிருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு நெல்லையை சென்றடையும் வகையிலும் இயக்கப்பட உள்ளது. சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் வகையில் இயக்கப்படவுள்ளது.

vande bharat train services,booking , வந்தே பாரத் ரயில் சேவை ,முன்பதிவு

இதேபோன்று திருநெல்வேலி- சென்னை இடையே இயக்கப்பட இருக்கும் வந்தே பாரத் ரயிலில் இரண்டு வகையான கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவைக்கான முன்பதிவு தொடங்கியது. சாதாரண ஏசி சேர்க்கார் இருக்கைக்கு ₨1610, முதல் வகுப்பு ஏசி சேர் காருக்கு ரூ.3005 கட்டணமாக நிர்ணயம் செய்யபட்டு உள்ளது.

இதையடுத்து சாதாரண ஏசி வகுப்பில் உணவு கட்டணம் ₨308, முதல் வகுப்பு ஏசி பெட்டியில் உணவு கட்டணம் ரூ. 369 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நாளை நாடு முழுவதும் 9 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் தொடங்கி வைக்க இருக்கிறார்.

Tags :