Advertisement

சென்னை OMR சாலை சுங்கக்கட்டணம் உயர்வு

By: vaithegi Sun, 26 June 2022 5:49:36 PM

சென்னை OMR சாலை சுங்கக்கட்டணம் உயர்வு


சென்னை: சென்னையில் ஓஎம்ஆர் சாலை என்று அழைக்கப்படும் சென்னை பழைய மகாபலிபுரம் சாலை நாவலூரில் சுங்க கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன் படி ஒரு முறை பயணிக்க ஆட்டோ கட்டணம் ரூ. 10ல் இருந்து ரூ.11 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு முறை சென்ற திரும்ப ரூ. 22, ஒரு நாள் முழுவதும் பல முறை பயணிக்க ரூ.37, மாதம் முழுவதும் பயணம் செய்வதற்கான பயண அட்டை ரூ.345 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கார் மற்றும் ஜீப்களுக்கு கட்டணம் ரூ. 30ல் இருந்து ரூ.33 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு முறை சென்று திரும்ப ரூ.22, ஒரு நாள் முழுவதும் பல முறை பயணிக்க ரூ.37, மாதம் முழுவதும் பயணம் செய்வதற்கான பயண அட்டை ரூ.345 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

customs,chennai ,சுங்கக்கட்டணம் ,சென்னை

மேலும், இலகுரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்களுக்கான கட்டணம் ரூ. 49ல் இருந்து ரூ. 54 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு முறை சென்ற திரும்ப ரூ.108, ஒரு நாள் முழுவதும் பல முறை பயணிக்க ரூ.150 , மாதம் முழுவதும் பயணம் செய்வதற்கான பயண அட்டை ரூ.3365 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பேருந்துகளுக்கான கட்டணம் ரூ. 78ல் இருந்து ரூ. 86ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன் படி ஒரு முறை சென்ற திரும்ப ரூ 170 , ஒரு நாள் முழுவதும் பல முறை பயணிக்க ரூ 255 , மாதம் முழுவதும் பயணம் செய்வதற்கான பயண அட்டை ரூ 5570 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் வாகனங்கள் மாதம் முழுவதும் பயணிக்க காருக்கு 350 ரூபாய், இலகு ரகு வாகனங்களுக்கு 400 ரூபாய், டிரக்குகள் மற்றும் பல அச்சு வாகனங்களுக்கு 1100 ரூபாய் கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கைலாஸ் முதல் மாமல்லபுரம் வரையிலான ராஜீவ் காந்தி சாலை தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் பராமரித்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :