Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொதுமக்களுக்கு சென்னை காவல் ஆணையர் முக்கிய எச்சரிக்கை

பொதுமக்களுக்கு சென்னை காவல் ஆணையர் முக்கிய எச்சரிக்கை

By: vaithegi Sun, 05 Mar 2023 1:45:28 PM

பொதுமக்களுக்கு சென்னை காவல் ஆணையர் முக்கிய எச்சரிக்கை

சென்னை: இன்றைக்கு அனைவரது கைகளிலும் ஸ்மார்ட் போன் உள்ளது. எனவே இதன் வாயிலாக எண்ணற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்து நமது அன்றாட வேலைகளை மிக எளிதாக செய்து வருகிறோம். இதையடுத்து இது ஒரு புறம் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியாக இருந்தாலும் மறுபுறம் இதனால் குற்றங்களும் அரங்கேறி கொண்டு வருகிறது.

இந்த தொழில்நுட்பத்தை கொண்டு மக்களை ஏமாற்றும் நோக்குடன் பலர் தனி நபரின் வங்கி சார்ந்த தரவுகளை திருடி அதன் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு தெரியாமலே அவர்களது பணத்தை கையாடல் செய்து கொண்டு விடுகின்றனர்.

warning,chennai ,எச்சரிக்கை,சென்னை

இதனை அடுத்து இது தொடர்பான புகார்கள் அண்மைக்காலமாக உயர்ந்து கொண்டே வருகிறது. இது குறித்து பேசிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தற்போது யூடியூப் வீடியோ மூலமான சைபர் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

சமீபத்தில் 2 புது வகையான சைபர் குற்றங்கள் பதிவாகி உள்ளது. அதாவது யூடியூப் வீடியோக்களுக்கு லைக் செய்ய வைத்து அதன் மூலம் பகுதி நேர வேலை வாய்ப்பு மற்றும் பணம் கிடைக்கும் என்ற ஆசை வார்த்தை கூறி மக்களை பணத்தை கட்ட தூண்டுகின்றனர்.

இதையடுத்து இந்த இணையதளம் வாயிலாக கட்டிய பணம் பயனர்களுக்கு திரும்ப கிடைப்பதில்லை. அதனால் பொதுமக்கள் எவ்வித இணையதளத்திலும் பணத்தை கட்டி ஏமாற வேண்டாம். மேலும் பான் மற்றும் ஆதார் கார்டு பற்றிய விவரங்களையும் பதிவிட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags :