Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை போலீசில் புதிதாக 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை போலீசில் புதிதாக 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

By: Monisha Tue, 06 Oct 2020 09:59:57 AM

சென்னை போலீசில் புதிதாக 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை போலீசில் நேற்று ஒரே நாளில் புதிதாக 17 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 6 லட்சத்து 25 ஆயிரத்து 391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 45 ஆயிரத்து 881 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 69 ஆயிரத்து 664 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 846 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு காவல்துறையும் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. தமிழக காவல்துறையை பொறுத்த மட்டில் இதுவரை 7,800 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

tamil nadu,corona virus,infection,treatment,deaths ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 25 பேர் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் குணமடைந்துள்ளனர். இந்தநிலையில், சென்னை போலீசில் நேற்று ஒரே நாளில் புதிதாக 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். இதனால் சென்னை போலீசில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,572 ஆக உயர்ந்தது. இதற்கிடையே நேற்று 8 போலீசார் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து பணிக்கு திரும்பினார்கள். இதனால் சென்னை போலீசில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2,324 ஆக உயர்ந்தது.

Tags :