Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முககவசம் அணியாமல் வாகனத்தில் செல்பவர்களுக்கு ரூ.500-ம் அபராதம்: சென்னை போலீசார் அதிரடி

முககவசம் அணியாமல் வாகனத்தில் செல்பவர்களுக்கு ரூ.500-ம் அபராதம்: சென்னை போலீசார் அதிரடி

By: Monisha Sat, 23 May 2020 1:21:13 PM

முககவசம் அணியாமல் வாகனத்தில் செல்பவர்களுக்கு ரூ.500-ம் அபராதம்: சென்னை போலீசார் அதிரடி

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் பாதிப்பு உச்சக்கட்டத்தில் உள்ளது. தற்போது அங்கு கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்குகிறது. எனவே சென்னையில் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. எனினும் பலர் அஜாக்கிரதையாக தமிழக அரசின் அறிவுரைகளை அலட்சியப்படுத்துகிறார்கள். எனவே முககவசம் அணியாமல் நடந்து செல்பவர்களுக்கு ரூ.100-ம், வாகனத்தில் செல்பவர்களுக்கு ரூ.500-ம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சென்னையில் நேற்று போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே வாகன தணிக்கைகளை நடத்தி கண்காணித்தனர். போக்குவரத்து போலீசாருடன் இணைந்து ஆயுதப்படை போலீசாரும் இப்பணியில் ஈடுபட்டனர். அப்போது முக கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை மடக்கி ரூ.500 அபராதம் விதித்தனர். பாக்கெட்டில் முக கவசம் வைத்திருந்தவர்கள், முக கவசத்தை முகத்தில் மாட்டாமல் கழுத்தில் செயின் போன்று மாட்டி இருந்தவர்கள் ஆகியோரிடமும் அபராதம் வசூலிக்கப்பட்டது. கைக்குட்டையை முக கவசம் போன்று பயன்படுத்திவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

tamil nadu,coronavirus,madras,facial shield,fine ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,சென்னை,முக கவசம்,அபராதம்

சென்னை அண்ணாசாலை ஸ்பென்சர் சிக்னலில் போலீசாரின் இந்த நடவடிக்கையை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் முககவசம் அணியாமல் அபராதத்துக்கு உள்ளானவர்களுக்கு இலவச முக கவசங்களை வழங்கினார். நடந்து சென்றவர்களுக்கும் முககவசங்களை கொடுத்தார்.

பின்னர் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நிருபர்களிடம் கூறும்போது, ‘இனிமேல் முக கவசம் அணியாமல் வெளியே வரக் கூடாது. அப்படி வந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். முக கவசம் அணியாமல் வாகனத்தில் வருவோருக்கு ரூ.500-ம், நடந்து வருபவர்களுக்கு ரூ.100-ம் அபராதம் வசூலிக்கப்படும்’ என்றார்.

Tags :
|