Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை, திருவள்ளூர் உள்பட 6 ஆகிய மாவட்டங்கள் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை, திருவள்ளூர் உள்பட 6 ஆகிய மாவட்டங்கள் கனமழை பெய்ய வாய்ப்பு

By: vaithegi Fri, 04 Nov 2022 10:46:50 AM

சென்னை, திருவள்ளூர் உள்பட 6 ஆகிய மாவட்டங்கள் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கொண்டே வருகின்றது. இதனால் கடந்த மூன்று தினங்களாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து கொண்டு வருகின்றது.

இதனை தொடர்ந்து தென்தமிழக பகுதிகளின் மேல் நிலவுகின்ற வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக வரும் 7-ம் தேதி வரைக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருக்கிறது.

heavy rain,chennai,thiruvallur ,கனமழை ,சென்னை, திருவள்ளூர்

இதையடுத்து இன்றைய நிலவரப்படி அடுத்த 3 மணி நேரத்திற்குள் திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய ஏழு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. அந்த 7 மாவட்டங்களுக்கும் நிர்வாக ரீதியாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதே போல் புதுக்கோட்டை, மதுரை, தேனி ,சிவகங்கை ,விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Tags :