Advertisement

முதல் போட்டியிலேயே மும்பை அணியை வென்ற சென்னை அணி

By: Nagaraj Sat, 19 Sept 2020 11:40:40 PM

முதல் போட்டியிலேயே மும்பை அணியை வென்ற சென்னை அணி

163 ரன்கள் என்ற இலக்கை 5 விக்கெட்டுகள் இழப்பில் அடைந்து மும்பை அணிடிய வென்று முதல் போட்டியிலேயே சென்னை அணி தன் கொடியை உயரே பறக்க விட்டுள்ளது.

சென்னை - மும்பை அணிகள் மோதிய ஐபிஎல் 2020 தொடரின் முதல் போட்டியில் டாஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார் தோனி. தொடர்ந்து மும்பை அணியின் ரோஹித் சர்மா, டி காக் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினாலும் அடுத்து வந்த வீரர்கள் சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர்.

ரோஹித் சர்மா 12 ரன்னிலும், டி காக் 33 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மும்பை அணியில் சவுரப் திவாரி மட்டும் அதிரடியாக விளையாடி 42 ரன்கள் அடித்தார். இறுதியில் மும்பை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் மட்டுமே அடித்தது.

chennai team,win,mumbai,5 wicket loss,dhoni ,சென்னை அணி, வெற்றி, மும்பை, 5 விக்கெட் இழப்பு, தோனி

சென்னை அணியில் லுங்கி கிடி 3 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் 2 விக்கெட்டுகளையும், சாம் குர்ரான் மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து 163 என்ற வெற்றி இலக்குடன் சென்னை அணி களம் இறங்கியது.

தொடக்கம் மோசமாக அமைந்தது. ஒரு பவுண்டரி மட்டுமே அடித்த நிலையில், முதல் விக்கெட்டாக ஷேன் வாட்சன் 5 ரன்களுக்கு போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே முரளி விஜய் பேட்டின்சன் பந்தில் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இதனால் வெறும் 6 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதையடுத்து களமிறங்கிய ராயுடு, டு பிளெஸி வெளுத்தெடுத்தனர். ராகுல் சஹார் வீசிய 16-வது ஓவரில் சிக்ஸர் அடிக்க முயன்று ஆட்டமிழந்தார் ராயுடு. அவர் 48 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 71 ரன்கள் எடுத்தார்.

பின்னர் ஜடேஜா 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய தோனி ஒரு பந்தை தொட முயற்சிக்க அவர் அவுட் என்று நடுவர் கூறினார். ஆனால் அது அவுட் இல்லை என்று தெரிய வந்தது. தொடர்ந்து தோனியும், டூ பிளெஸ்ஸியும் களத்தில் இருந்தனர். பின்னர் டூ பிளெஸ்ஸி பவுண்டரி அடித்து அசத்தினார். இதற்கு அடுத்த பந்தில் ஒரு ரன் எடுக்க டூ பிளெஸ்ஸியும் அரைசதத்தை எட்டினார். இதையடுத்து கடைசி ஓவரில் சென்னையின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது.

போல்ட் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் டூ பிளெஸ்ஸி பவுண்டரி அடிக்க ஆட்டம் சமநிலை அடைந்தது. அடுத்த பந்தில் 1 ரன் எடுக்க சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டூ பிளெஸ்ஸி 44 பந்துகளில் 55 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Tags :
|
|