Advertisement

செஸ் ஒலிம்பியாட்: பிரதமர் மோடிக்கு நேரில் அழைப்பு..

By: Monisha Tue, 19 July 2022 8:07:35 PM

செஸ் ஒலிம்பியாட்: பிரதமர் மோடிக்கு நேரில் அழைப்பு..

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. உலகம் முழுவதிலும் இருந்து 187 நாடுகளைச் சேர்ந்த செஸ் வீரர்கள் போட்டியில் பங்கேற்க வருகின்றனர். இந்த போட்டிகளை மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதற்காக ரூ.100 கோடி வரை ஒதுக்கி உள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவை சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிக கோலாகலமாக நடத்தவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ளார்.ஏ.ஆர்.ரகுமான் இசையில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று விழாவை தொடங்கி வைக்க உள்ளார்.இதற்காக பிரதமர் மோடி வருகிற 27-ந்தேதி சென்னை வருகிறார்.

chess olympiad,modi,stalin,invited ,செஸ் ஒலிம்பியாட், மோடி,நாடு,ஸ்டாலின்,

இதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுப்பதாக ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்தது.ஆனால் கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லவில்லை. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது பிரதமர் மோடி போனில் உடல்நலம் விசாரித்தார். அப்போது செஸ் போட்டியை தொடங்கி வைக்க சென்னை வருமாறு அழைப்பு விடுத்தார்.தற்போது மு.க.ஸ்டாலின் குணம் அடைந்து வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

அவரது சார்பில் டி.ஆர்.பாலு எம்.பி., கனிமொழி எம்.பி., தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் இன்று டெல்லி சென்று பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அழைப்பிதழை நேரில் சென்று வழங்கினார்கள்.அப்போது பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க கண்டிப்பாக சென்னை வருவதாக கூறினார்.

Tags :
|
|