Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செஸ் ஒலிம்பியாட்: பிரதமர் மோடியுடன் தமிழ்நாடு குழு இன்று காலை 11 மணிக்கு சந்தித்து பேச்சுவார்த்தை

செஸ் ஒலிம்பியாட்: பிரதமர் மோடியுடன் தமிழ்நாடு குழு இன்று காலை 11 மணிக்கு சந்தித்து பேச்சுவார்த்தை

By: vaithegi Tue, 19 July 2022 10:22:31 AM

செஸ் ஒலிம்பியாட்: பிரதமர் மோடியுடன் தமிழ்நாடு குழு இன்று காலை 11 மணிக்கு சந்தித்து பேச்சுவார்த்தை

சென்னை: சர்வதேச அளவில் 44 -வது 'செஸ் ஒலிம்பியாட்' சதுரங்க போட்டிகள் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடக்கிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தமிழக அரசு இந்த போட்டிகளை மிக சிறப்பாக நடத்த திட்டமிட்டு உள்ளது.

மேலும் இப்போட்டியில் 188 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கேற்று விளையாட உள்ளனர். 'செஸ் ஒலிம்பியாட்' போட்டி தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் "நம்ம செஸ், நம்ம பெருமை" என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

chess olympiad,prime minister modi,tamil nadu team,talks ,செஸ் ஒலிம்பியாட்,பிரதமர் மோடி,தமிழ்நாடு குழு,பேச்சுவார்த்தை

இதை அடுத்து சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் தொடக்க விழா நடைபெறுகிறது. விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்நிலையில், பிரதமர் மோடியுடன் தமிழ்நாடு குழு இன்று காலை 11 மணிக்கு சந்தித்து பேசுகின்றனர்.

இந்த சந்திப்பின்போது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா அழைப்பிதழை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, அமைச்சர் மெய்யநாதன், தலைமை செயலர் இறையன்பு ஆகியோர் வழங்க உள்ளனர்.

Tags :