Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செட்டிநாடு குழுமம் ரூ.700 கோடி வருமானவரி ஏய்ப்பு செய்ததாக தகவல்

செட்டிநாடு குழுமம் ரூ.700 கோடி வருமானவரி ஏய்ப்பு செய்ததாக தகவல்

By: Nagaraj Wed, 16 Dec 2020 09:32:36 AM

செட்டிநாடு குழுமம் ரூ.700 கோடி வருமானவரி ஏய்ப்பு செய்ததாக தகவல்

700 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு... செட்டிநாடு குழுமம் தொடர்பான 60 இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டில், 700 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும், கணக்கில் வராத 110 கோடி ரூபாய் வெளிநாட்டு சொத்துகள் ரெய்டில் சிக்கியதாகவும் வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

சென்னை, திருச்சி, கோவை, மும்பை, ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான 60 இடங்களில், கடந்த 9ஆம் தேதி ரெய்டு நடத்தப்பட்டது வருமான வரித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கணக்கில் வராத ரொக்கப் பணம் 23 கோடி ரூபாய், ஃபிக்சட் டெபாசிட் வடிவில் கணக்கில் வராத 110 கோடி ரூபாய் வெளிநாட்டு சொத்துகள் இந்த ரெய்டில் சிக்கியதாகவும், இவை கறுப்பு பண தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கத்தக்க குற்றங்கள் என்றும் வருமான வரித் துறை கூறியுள்ளது.

investigation,inspection,tax evasion,income tax ,விசாரணை, சோதனை, வரிஏய்ப்பை, வருமான வரித்துறை

செலவை அதிகரித்து காட்டுவது, லாபத்தை குறைத்து காட்டுவது, வரவுகளை முழுமையாக வரவு வைக்காதது என 435 கோடி ரூபாய் அளவுக்கு பொய்க் கணக்கு காட்டியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் வருமான வரித் துறை கூறியுள்ளது.

மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நன்கொடை பெற்றதற்கான அடையாளங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்கட்டமைப்பு சார்ந்த 3 சொத்துகளை மற்றொரு குழுமத்திற்கு விற்ற வகையில், 280 கோடி ரூபாய் மூலதன ஆதாயத்தை குறைத்துக் காட்டுவதற்காக நடைபெற்ற மோசடியும் கண்டறியப்பட்டுள்ளது.

இதேபோல, செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான ஏராளமான லாக்கர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவை விரைவில் சோதனைக்கு உட்படுத்தப்படும் என தெரிவித்துள்ள வருமான வரித்துறை, தற்போது 700 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பை கண்டுபிடித்திருப்பதாகவும், சோதனை தற்காலிகமாக நிறைவடைந்திருந்தாலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.

Tags :