சிகாகோவில் பெண்களை பேஸ்பால் மட்டையால் தாக்கிய இளம்பெண் கைது
By: Nagaraj Sun, 14 May 2023 12:55:17 PM
சிகாகோ: இளம் பெண் கைது... அமெரிக்காவின் சிகாகோ நகரில் பல பெண்களை, பேஸ்பால் மட்டையால் தாக்கிய 26 வயது இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
டெனிஸ் சோலோர்சானோ என்ற அந்த இளம்பெண், கடந்த வாரம், பல்வேறு பகுதிகளில் பொது இடங்களில் வைத்து முன் பின் தெரியாத 5க்கும் மேற்பட்ட பெண்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
குழந்தையை தள்ளுவண்டியில் அழைத்துச் சென்ற பெண் ஒருவரை சோலோர்சானோ சரமாரியாக தாக்கிய வீடியோவும் வெளியானது.
அதனிப்படையில், சோலோர்சானோவை கைது செய்த போலீசார், தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Tags :
assault |
teenager |
video |
police |
women |