Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

By: Monisha Tue, 03 Nov 2020 09:05:26 AM

அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

தமிழகத்தில் 16-ந் தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்கும். அதற்காக வாக்காளர்களிடம் இருந்து பெயர் சேர்ப்பு, திருத்தம், பெயர் நீக்கம் போன்றவற்றுக்காக விண்ணப்பங்கள் பெறப்படும். சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வாக்காளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படும்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் தேதியில் இருந்து டிசம்பர் 15-ந் தேதிக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் விண்ணப்பங்கள் பெறப்படும். அந்த விண்ணப்பங்கள் அனைத்தும் வரும் ஜனவரி 5-ந் தேதிக்குள் இறுதி செய்யப்பட்டு ஜனவரி 20-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

politics,elections,satyapratha saku,consulting,voter list ,அரசியல்,தேர்தல்,சத்யபிரத சாகு,ஆலோசனை,வாக்காளர் பட்டியல்

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பு வழக்கமாக அனைத்து கட்சி கூட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும். அந்த வகையில் அங்கீகரிக்கட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம், இரட்டை பெயர் பதிவுகள் நீக்கம், வாக்குச்சாவடி முகவர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்துவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படும்.

Tags :