Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

By: Monisha Tue, 01 Dec 2020 09:49:09 AM

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

தமிழகத்திலே அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 16-ந்தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டது. மேலும், வரும் ஜனவரி 1-ந்தேதியை வாக்காளராகும் நாளாக (18 வயது முடிப்பவர்கள்) கணக்கிட்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணியை மேற்கொள்ள, மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

வாக்காளர்கள், தங்கள் பெயர் விவரங்களை வாக்காளர் பட்டியலில் சரிபார்க்க வேண்டும். பெயர் சேர்ப்பது, ஆட்சேபனை தெரிவிப்பது போன்றவற்றுக்கு வருகிற 15-ந்தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அளிக்கப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் வரும் ஜனவரி 5-ந்தேதி இறுதி செய்யப்படும். பின்னர் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

voter list,collectors,electoral officer,consulting,correction ,வாக்காளர் பட்டியல்,கலெக்டர்கள்,தேர்தல் அதிகாரி,ஆலோசனை,திருத்தப்பணி

இந்தநிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளில் உள்ள முன்னேற்றம் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம், காணொலி காட்சி மூலம் நடந்தது.

கூட்டத்தின் போது, புதிய வாக்காளர்களை சேர்த்தல், இரட்டை பெயர் பதிவுகள், இறந்த வாக்காளர் பெயர் ஆகியவற்றை நீக்குதல் போன்ற முக்கிய பணிகள் மாவட்ட அளவில் எந்த அளவில் செய்யப்படுகிறது என்பது பற்றி அவர் கேட்டறிந்தார்.

Tags :