Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாவட்ட ஆட்சியாளர்களுடன் ஆலோசனை: அரசு எடுத்து வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் அறிவிப்பு

மாவட்ட ஆட்சியாளர்களுடன் ஆலோசனை: அரசு எடுத்து வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் அறிவிப்பு

By: Monisha Wed, 29 July 2020 1:51:10 PM

மாவட்ட ஆட்சியாளர்களுடன் ஆலோசனை: அரசு எடுத்து வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஜூலை 31-ம் தேதி வரை பொது ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா? என்பது குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை நடத்தினர்.

மாவட்ட ஆட்சியாளர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்திய போது கொரோனா தடுப்பில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வீடு வீடாக சென்று பரிசோதனை நடத்தப்படுகிறது. கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. நாளொன்றுக்கு 63 ஆயிரம் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மருத்துவ உபகரணங்கள் தேவையான அளவில் கையிருப்பில் உள்ளன.

district collectors,preventive measures,cm edappadi palanisamy,consultation ,மாவட்ட ஆட்சியாளர்கள்,தடுப்பு நடவடிக்கை,முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,ஆலோசனை

கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மக்களுக்கு எதிர்ப்பு சக்தி மருந்துகள் வழங்கப்படுகின்றன. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்துள்ளது. பிளாஸ்மா சிகிச்சையின் மூலம் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. ஆகஸ்டு 5-ந்தேதி முதல் ரேஷன் கடைகளில் விலையில்லா முகக் கவசங்கள் வழங்கப்படும். ஊரடங்கு காலத்தில் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலம் தமிழ்நாடு. இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Tags :