Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டில்லியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

டில்லியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

By: Nagaraj Sun, 16 July 2023 4:34:47 PM

டில்லியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

டில்லி: டில்லியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பார்வையிட்டார். டில்லியில் பல்வேறு இடங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

யமுனையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் தேசியத் தலைநகா் டில்லியின் பல்வேறு இடங்களை வெள்ளநீா் சூழ்ந்துள்ளது. நகரத்தின் யமுனா பஜாா், ராஜ்காட், கஷ்மீரி கேட், ஐ.எஸ்.பி.டி., ஐ.டி.ஓ., மயூா்விஹாா் உள்ளிட்டப் பகுதிகள் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளப் பாதிப்பு காரணமாக யமுனை ஆற்றின் கரையோரம் வசித்த ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைப்பட்டுள்ளனா். கடந்த 3 நாள்களாக யமுனையின் நீா்மட்டம் உயா்ந்து வந்த நிலையில், நேற்று முதல் குறையத் தொடங்கியது.

இந்த நிலையில் டில்லியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பார்வையிட்டார். முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து குறைகளையும் அவர் கேட்டறிந்தார்.

temporary relief,possessions,flooded,areas,curriculum ,தற்காலிக நிவாரணம், உடைமைகள், வெள்ளம் சூழ்ந்தது, பகுதிகள், பாடப்புத்தக்கங்கள்

அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், யமுனை வெள்ளத்தால் வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ள மக்களுக்காக பல்வேறு பகுதிகளில் நிவாரண முகாம்களை திறந்துள்ளோம்.

வெள்ளத்தின் போது ஏராளமானோர் ஆதார் போன்ற முக்கிய ஆவணங்களை இழந்துள்ளனர். எனவே சிறப்பு முகாம்கள் அமைத்து பாடப்புத்தகங்கள் உள்ளிட்டவை வழங்கப்படும்.

வெள்ளத்தில் தங்கள் உடைமைகள் அனைத்தையும் இழந்த மக்களுக்கு தற்காலிக நிவாரணம் வழங்கவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

Tags :
|