Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முதல்வர் ஆனால் கையெழுத்திடும் முதல் உத்தரவு குறித்து தேஜஸ்வி யாதவ் அறிவிப்பு

முதல்வர் ஆனால் கையெழுத்திடும் முதல் உத்தரவு குறித்து தேஜஸ்வி யாதவ் அறிவிப்பு

By: Karunakaran Fri, 23 Oct 2020 3:35:03 PM

முதல்வர் ஆனால் கையெழுத்திடும் முதல் உத்தரவு குறித்து தேஜஸ்வி யாதவ் அறிவிப்பு

பீகார் மாநிலத்தில் வரும் 28ம்தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். நவடா மாவட்டம் ஹிசுவாவில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும் முதலமைச்சர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் தேஜஸ்வி யாதவ் பேசுகையில், பீகார் தேர்தலில் வெற்றி பெற்று நான் முதலமைச்சர் ஆனால், முதல் அமைச்சரவை கூட்டத்தில், பீகார் இளைஞர்களுக்கு 10 லட்சம் அரசு வேலைவாய்ப்பு வழங்கும் உத்தரவில் கையெழுத்திடுவேன். பீகாரில் பிரதமருக்கு மிகவும் வரவேற்பு உள்ளது என்று கூறினார்.

chief minister,tejaswi yadavthe,first order,signed ,முதல்வர், தேஜஸ்வி யாதவ்தே, முதல் உத்தரவு, கையெழுத்து

மேலும் அவர், பிரதமர் பீகார் சிறப்பு அந்தஸ்து மற்றும் தொழிற்சாலைகள் இல்லாதது, வேலையின்மை மற்றும் பிற மாநில பிரச்சினைகள் குறித்து பதில்களை வழங்கியிருக்க வேண்டும். பீகார் மாநிலம் நிலப்பரப்பால் சூழப்பட்ட மாநிலம் என்பதால் கடல் இல்லாத நிலையில் தொழிற்சாலைகளை நிறுவ முடியாது என பிரதமர் கூறுயதாக தெரிவித்தார்.

நிதீஷ் ஜி, நீங்கள் இப்போது சோர்வாக இருக்கிறீர்கள். பீகார் நிர்வாகத்தை கையாள முடியாது. பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் அரியானாவும் நிலத்தால் சூழப்பட்ட மாநிலங்கள்தான். ஆனாலும் அங்கு தொழிற்சாலைகள் உள்ளன. நமது மக்கள் அங்கு வேலைக்குச் செல்கிறார்கள் என தேஜஸ்வி யாதவ் கூட்டத்தில் பேசினார்.


Tags :