Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து மாவட்ட செயலாளர்களுடன் முதல்வர் ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து மாவட்ட செயலாளர்களுடன் முதல்வர் ஆலோசனை

By: Nagaraj Thu, 23 Mar 2023 10:58:13 AM

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து மாவட்ட செயலாளர்களுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்... திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளுவது குறித்து கூட்டத்தில் பேசப்பட்டதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டின் நம்பர் ஒன் கட்சியான தி.மு.க, வலுவான கட்சிக் கட்டமைப்பை கொண்டுள்ள கட்சி. சென்ற ஆண்டு இறுதியில், தி.மு.கவில் உள்கட்சித் தேர்தல் நடந்தது. இதில் 71 மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள். ஏற்கனவே மாவட்டச் செயலாளராக இருந்தவர்களில் 7 பேர் மாற்றம் செய்யப்பட்டும், 64 பேர் ஒருமனதாகவும் தேர்வு செய்யப்பட்டார்கள்.

மாவட்டச் செயலாளர்களில் பெரும்பாலானவர்கள் அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள். இரு கோஷ்டிகளாக உள்ள சில மாவட்டங்களில் மட்டும் அவ்வப்போது மோதல்கள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற மோதலில் இரு தரப்பு ஆட்களும் காவல்நிலையத்திலேயே நேருக்கு நேர் மோதிக்கொண்டது மாநில அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சென்னையில் கூடிய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளிப்படையாக நிர்வாகிகளை கண்டித்து பேசியிருக்கிறார். தலைமையை மீறி வருந்தத்தக்க சில செயல்கள் நடப்பதாகவும் இதையெல்லாம் திமுக நிர்வாகிகள் தவிர்த்திருக்க வேண்டும் என்று பேசினார்.

திமுகவின் நிர்வாகிகளையும், தொண்டர்களையும் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு, மாவட்டச் செயலாளர்களுக்கு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

dmk,meeting,chief minister,warning,bad name,election ,திமுக, கூட்டம், முதல்வர், எச்சரிக்கை, கெட்ட பெயர், தேர்தல்

நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்று முதல்வர் பேசி, நூறு நாள் ஆகிவிட்டது. யாருமே எதிர்பாராத நிலையில் வந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் கட்சியினர் மத்தியில் பதட்டத்தையும், கவலையையும் ஏற்படுத்திவிட்டனர். ஏராளமான மாவட்டச்செயலார்கள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரச்சாரத்தில் களமிறங்க வேண்டியிருந்தது.

40 தொகுதிகளையும் கைப்பற்றி இந்திய அரசியலில் தி.மு.க. முக்கியமான சக்தியாக திகழ வேண்டும் என்று முதல்வர் பேசிய பின்னர், புதிய வியூகங்கள் வகுக்கப்பட்டன. தி.மு.க. இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மறுபடியும் நியமிக்கப்பட்டார். கனிமொழி எம்.பி. கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட காரணத்தால் மகளிரணிக்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

இது தவிர தி.மு.கவில் பல்வேறு புதிய அணிகளும் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு அணிகளுக்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டார்கள். மாணவரணி, தொழிலாளர் அணி, வர்த்தகர் அணி, தகவல் தொழில் நுட்ப அணி, சுற்றுச்சூழல் அணி, வெளிநாடு வாழ் இந்தியர் நல அணி உள்ளிட்ட 23 அணிகளுக்கு மாநில அளவில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டார்கள்.

கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள், நாடாளுமன்ற தேர்தல் பணிகள் உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகளில் மாவட்டச் செயலாளர்கள் கழக அணி நிர்வாகிகளுடன் இணைந்து செயல்பாடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. பூத் கமிட்டி உறுப்பினர்களை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டதும், சட்டமன்றத் தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

Tags :
|