Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை சந்திப்பு

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை சந்திப்பு

By: Monisha Sat, 04 July 2020 3:56:08 PM

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை சந்திப்பு

சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து பேசுகிறார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிதீவிரமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் மாநிலத்தில் புதிதாக 4 ஆயிரத்து 329 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 2 ஆயிரத்து 721 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 1,178 பேர் அடங்குவர்.

நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 42 ஆயிரத்து 955 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 58 ஆயிரத்து 378 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

governor,chief minister,meeting,corona virus,prevention ,ஆளுநர்,முதலமைச்சர்,சந்திப்பு,கொரோனா வைரஸ்,தடுப்பு நடவடிக்கை

அதேசமயம் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,385 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 5 மணி அளவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து பேசுகிறார். அப்போது, தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க உள்ளார்.

மேலும், சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாகவும், அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் கவர்னரிடம் முதலமைச்சர் எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :