Advertisement

காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

By: vaithegi Tue, 11 July 2023 1:57:58 PM

காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

சென்னை: தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், காவல்துறை அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் குற்றங்களை தடுக்க அறிவுறுத்தல்.. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் காவல்துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய போது, காவல்துறை அரசுத்துறை செயலாளர்கள் முழு ஒத்துழைப்பு தந்து பணியாற்ற வேண்டும். சரியாக பின்பற்றி வருவதால் அமைதி தமிழ்நாடு அமைதி பூங்காவாக உள்ளது. காவல்துறையின் செயல்பாடு மிகவும் திருப்திகரமாக உள்ளது. குற்றங்கள் குறைவு என எண்ணிக்கை விட குற்றங்களை நடைபெறவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். குற்றங்கள் நடக்காமல் தடுக்கும் துறையாக காவல் துறை செயல்பட வேண்டும். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பெரிய பிரச்சினையாக இல்லை.

chief minister,police officer ,முதல்வர் ,காவல்துறை அதிகாரி


இதையடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கண்டறியப்பட்டவுடன் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும், நாடாளுமன்ற தேர்தல் வருவதால் காவல்துறை அதிகாரிகள் மிக மிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் விசாரிக்கப்படும் போது காவலர்கள் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் மற்றும் பெண்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக விசாரித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

கள்ள சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனையை முழுமையாக தடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். சமூக வலைத்தளங்களில் சாதி மத ரீதியான வன்மங்களை பரப்புபவர்கள் அதிகமாகி கொண்டு வருகின்றனர். அவர்கள் தான் சமூக அமைதியை கெடுக்க காரணமாக உள்ளனர். அவர்களால் அப்பாவிகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் சொகுசாக உட்கார்ந்து கொண்டு இது போன்ற வன்மங்களை விதைப்பவர்கள் தப்பி விடுகிறார்கள். நச்சு கருத்துக்களை பரப்புபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.

Tags :