Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பருவமழை டிசம்பர் மாதம் வரை தொடரும் ... மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் இருக்க ... முதல்வர் அறிவுறுத்தல்

பருவமழை டிசம்பர் மாதம் வரை தொடரும் ... மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் இருக்க ... முதல்வர் அறிவுறுத்தல்

By: vaithegi Tue, 01 Nov 2022 6:42:49 PM

பருவமழை டிசம்பர் மாதம் வரை தொடரும்  ...  மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் இருக்க ... முதல்வர்  அறிவுறுத்தல்

சென்னை: சென்னையில் நேற்று பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து வரும் 5ம் தேதி வரை கனமழை கொட்டித்தீர்க்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது . இந்த வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதம் வரை தொடரும் என்பதால் மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சில மாவட்டங்களில் மழை காலம் என்றாலே நீர் நிலைகள் நிரம்பி உபரி நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

chief minister,monsoon,district administrations ,முதல்வர்  ,பருவமழை , மாவட்ட நிர்வாகங்கள்

இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலைக்கு ஆளாகின்றனர். மழை நீரும் கழிவு நீரும் கலப்பதால் தொற்று நோய்களாலும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதனால் மழையினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க சென்னையில் முன்னெச்சரிக்கை பணிகள் மிக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்களுக்கு எல்லா நேரங்களிலும் உதவ மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருந்து கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து இது குறித்து பேசிய முதல்வர் கன மழையை எதிர்கொள்ள அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும். சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் ஏற்படாதவாறு தடுக்க வேண்டியது மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்பு என அவர் கூறியுள்ளார்.

Tags :