Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சலவை,சலூன்,தையல்காரர்களுக்கு தலா 10000 ரூபாய் வழங்க முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு

சலவை,சலூன்,தையல்காரர்களுக்கு தலா 10000 ரூபாய் வழங்க முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு

By: Karunakaran Thu, 11 June 2020 1:48:39 PM

சலவை,சலூன்,தையல்காரர்களுக்கு தலா 10000 ரூபாய் வழங்க முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதனால் சாமானிய தொழிலாளர்கள், ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் அவர்களுக்கு நிவாரண உதவிகள் மற்றும் கடனுதவி போன்றவை அரசு மூலமாக வழங்கப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி போன்ற பலத்திட்டங்களை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்து வருகிறார். அந்தவகையில்,சலவைத் தொழிலாளிகள், சலூன் கடைக்காரர்கள், தையல்காரர்களுக்கு ஆகியோருக்கு உதவும் வகையில் புதிய ஒன்றை வெளியிட்டுள்ளார்.

jaganmohan reddy,laundryman,tailors,andhra pradesh,corona virus ,ஜெகன்மோகன் ரெட்டி,சலவைத் தொழிலாளிகள், கொரோனா வைரஸ்,ஆந்திரா

அதன்படி, சலவைத் தொழிலாளிகள், சலூன் கடைக்காரர்கள், தையல்காரர்கள் என மொத்தம் 2.47 லட்சம் பேருக்கு தலா 10000 ரூபாய் வழங்க ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இந்த நிதியுதவிக்கு சுமார் 247 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் 82,347 சலவை தொழிலாளர்கள், 38,767 சலூன் கடைக்காரர்கள், 1,25,926 தையல்காரர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டத்தை ஜெகன் மோகன் ரெட்டி துவங்கி வைத்த போது, கடந்த ஒரு வருடத்தில் 3.58 கோடி மக்களுக்கு ரூ.42,465 கோடி நிதியுதவியை தனது அரசு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags :