Advertisement

சாலைப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு

By: vaithegi Thu, 21 Sept 2023 10:13:33 AM

சாலைப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு

சென்னை: சென்னை புறநகரில் சாலைப் பணிகளை இன்று ஆய்வு செய்கிறார் ...சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் தொடர்பாக இந்த வாரம் ஆய்வு நடத்தவுள்ளேன். பல்வேறு மாவட்டங்களில் சாலைகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாவதோடு சிறு விபத்துக்கள் ஏற்படுவதாக செய்திகள் வந்து உள்ளது.

இதையடுத்து இது ஏற்புடையது அல்ல; அமைச்சர்கள் , அதிகாரிகள் , மாவட்ட ஆட்சியர்கள் கவனம் செலுத்த வேண்டும். நானும் கள ஆய்வு மேற்கொள்வேன். சாலை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்பதை கண்டிப்பாக தெரிவித்துக் கொள்கிறேன் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியிருந்தார்.

chief minister m.k.stalin,road work ,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சாலைப் பணி

இந்த நிலையில் சென்னையில் முதலமைச்சர் இன்று ஆய்வு மேற்கொள்கிறார். மடிப்பாக்கம், முகலிவாக்கம், கொளப்பாக்கம், ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்கிறார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே சாலைப் பணிகளை முடிக்க உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று ஆய்வு மேற்கொள்கிறார்.

Tags :