Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவாரூர், நாகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணம் மேற்கொள்கிறார்

திருவாரூர், நாகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணம் மேற்கொள்கிறார்

By: vaithegi Wed, 23 Aug 2023 10:18:15 AM

திருவாரூர், நாகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணம் மேற்கொள்கிறார்


சென்னை: முதல்வர் 4 நாள் பயணம் ... திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

அந்த வகையில் நாளை (ஆக.24-ம் தேதி) காலை 9 மணிக்கு சென்னையிலிருந்து திருச்சி செல்லும் முதல்வர், அங்கிருந்து நாகப்பட்டினம் சென்று இரவு தங்குகிறார்.

அதனை அடுத்து வருகிற ஆக. 25-ம் தேதி திருக்குவளையில் முதல்வரின் காலை சிற்றுண்டி விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.பிறகு, நாகை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர், எம்.பி., எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

travel,tiruvarur,nagai,chief minister m.k.stalin ,பயணம் , திருவாரூர், நாகை, முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதைத்தொடர்ந்து வருகிற ஆக.26-ம் தேதி முதல்வர் கள ஆய்வு திட்டத்தில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

மேலும் வருகிற 27-ம் தேதி திருத்துறைப்பூண்டியில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், சென்னை திரும்புகிறார்.

Tags :
|
|