Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதிய தலைமை செயலர் யார் .. தேர்ந்தெடுக்கும் ஆலோசனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதிய தலைமை செயலர் யார் .. தேர்ந்தெடுக்கும் ஆலோசனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

By: vaithegi Thu, 22 June 2023 1:18:09 PM

புதிய தலைமை செயலர் யார் .. தேர்ந்தெடுக்கும் ஆலோசனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் உச்சபட்ச அரசு பதவியாக கருதப்படும் தலைமை செயலாளர் பொறுப்புக்கு புதியதாக யாரை தேர்ந்தெடுக்கலாம் என்ற ஆலோசனையில் தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , மூத்த அரசு அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

தற்போது பொறுப்பில் இருக்கும் தலைமை செயலாளர் இறையன்பு இந்த மாதம் 60வயது பூர்த்தி அடைவதை அடுத்து வருகிற 30-ம் தேதி ஓய்வு பெறவுள்ளார். அதனால் அடுத்த தலைமை செயலாளர் யார் என்று முதல்வர் ஆலோசனை நடத்தி கொண்டு வருகிறார்.

chief minister m.k.stalin,who is the chief secretary? ,முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலர் யார்

இதனை அடுத்து அந்த லிஸ்டில் 13 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும், இந்த மாதம் தான் டிஜிபி சைலேந்திர பாபுவும் ஓய்வு பெறவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யுபிஎஸ்சி தேர்வு செய்து அனுப்பும் 3 ஐபிஎஸ் அதிகாரிகளிலிருந்து ஒருவரை தமிழக டிஜிபியாக தமிழக அரசு தேர்வு செய்யும். எனவே அதற்கான ஆலோசனையும் இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Tags :