Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாசன வசதிக்காக மேட்டூர் அணையை இன்று திறந்து வைக்கிறார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாசன வசதிக்காக மேட்டூர் அணையை இன்று திறந்து வைக்கிறார்

By: vaithegi Mon, 12 June 2023 09:50:32 AM

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாசன வசதிக்காக மேட்டூர் அணையை இன்று திறந்து வைக்கிறார்

சென்னை: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து பாசன வசதிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கமான ஒன்றாக காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக அணையில் உள்ள நீரின் இருப்பைப் பொறுத்து ஜூன் மாதம் 12-ம் தேதிக்கு முன்னதாகவோ அல்லது காலதாமதமாகவோ தண்ணீர் திறக்கப்படும்.

இதையடுத்து இச்சூழலில் இந்தாண்டு ஜூன் 12-ம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேட்டூர் அணையை திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டது.எனவே இதற்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை கவனித்து வந்தனர்.இந்த நிலையில் பாசன வசதிக்காக மேட்டூர் அணையை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. முதலமைச்சரின் வருகையை ஒட்டி அணையின் வலது கரையில் விழா மேடை அமைக்கப்பட்டு உள்ளது.

mettur dam,chief minister m. k. stalin ,மேட்டூர் அணை,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மேல்மட்ட மதகுகளின் மேல் பகுதியில் மின்விசை அமைக்கப்பட்டு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நிற்பதற்காக தனி மேடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே .என். நேரு , எம். ஆர். கே. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மேட்டூர் அணை திறப்பின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களில் சுமார் 17.37 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இப்பாசனத்தின் மூலம் குருவை ,சம்பா, தாளடி ஆகிய முப்போக விளைச்சலுக்கும் இது பயனளிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :