ராமநாதபுர மீனவர் நல மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்கிறார்
By: vaithegi Fri, 18 Aug 2023 11:05:08 AM
ராமேஸ்வரம் : இன்று நடைபெறும் மீனவர் நல மாநாட்டில் பங்கேற்கிறார் முதலமைச்சர் .... ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் இன்று நடைபெறும் மீனவர் மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார்.
மதுரை மற்றும் ராமநாதபுரத்திற்கு 2 நாட்கள் பயணம் மேற்கொண்டுஉள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ராமநாதபுரத்தில் நடைபெறும் பிரம்மாண்ட மீனவர் நல மாநாட்டில் பங்கு கொள்கிறார்.
இதையடுத்து இதில் மீனவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா ,மீன் வியாபாரம் செய்யும் பெண்களுக்கு ஐஸ் பெட்டி உள்ளிட்ட உபகரணங்கள், புதிய மீன்பிடி இறங்கு தளம் ,குளிர்பதனை சேமிப்பு கிடங்குகள் ,
இதனை அடுத்து மீனவ கிராமங்களில் கடல் அரிப்பினை தடுக்க தூண்டில் வளைவு , தடுப்பு சுவர் அமைத்தல் , தடைக்கால நிவாரணம் மற்றும் மானிய டீசல் அதிகரிப்பு பற்றிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டு உ ள்ளது.