Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 15-ம் தேதி சேலம் பயணம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 15-ம் தேதி சேலம் பயணம்

By: vaithegi Wed, 08 Feb 2023 09:50:50 AM

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 15-ம் தேதி சேலம் பயணம்

சேலம்: மாவட்ட திட்ட பணிகளை ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் செல்கிறார் ...... தமிழகம் முழுவதும் அனைத்து துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இதையடுத்து சேலம் மண்டலத்துக்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான கள ஆய்வு கூட்டம் வருகிற 15, 16-ம் தேதிகளில் சேலத்தில் நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திட்டப்பணிகள் செயல்படுபத்தப்படுவது குறித்து துறை வாரியாக ஆய்வு செய்கி்றார்.

salem,m.k.stalin,district planning works ,சேலம் , மு.க.ஸ்டாலின்,மாவட்ட திட்ட பணிகள்


கூட்டத்தில் 4 மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் ஆலோசனை நடத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்தும் கடந்த 2021-22-ம் ஆண்டு மற்றும் நடப்பாண்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், நிதி ஒதுக்கீடு பற்றிய விவரங்கள் அனுப்ப உத்தரவிட்டப்பட்டுள்ளது.

எனவே இந்த விவரங்களை சேகரித்து அனுப்பும் பணியில் அதிகாரிகள் மிக மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று கொண்டு வருகின்றனர். மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி கொண்டு வருகின்றனர்.

Tags :
|