Advertisement

வரும் 9-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்

By: vaithegi Thu, 07 Sept 2023 10:05:26 AM

வரும் 9-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்

சென்னை: நாளை மறுநாள் டெல்லி செல்கிறார் முதலமைச்சர் .... சர்வதேச அளவிலான ஜி20 அமைப்புக்கு இந்தியா இந்த முறை தலைமை ஏற்றுள்ளது. அதன்படி ஜி20 குழுவின் 18 -வது மாநாடு நாளை முதல் வருகிற 10ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெறவுள்ளது.

இதனை அடுத்து இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா ,சீனா, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இடம்பெறுகின்றன. அமெரிக்க அதிபர் ஜோபைடன், ஆஸ்திரேலியா பிரதமர் , பிரிட்டன் பிரதமர், ஜப்பான் பிரதமர் உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

delhi,chief minister ,டெல்லி ,முதலமைச்சர்


இதையடுத்து ஜி20 மாநாட்டை முன்னிட்டு சர்வதேச தலைவர்கள் உள்ளிட்டோருக்கு குடியரசுத் தலைவர் விருந்து அளிக்கிறார்.

இந்த நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் நாளை மறுநாள் டெல்லி செல்கிறார் ஜி20 மாநாட்டை முன்னிட்டு குடியரசு தலைவர் அளிக்கும் விருந்தில் அவர் பங்கேற்கிறார்.



Tags :
|