Advertisement

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை

By: vaithegi Mon, 06 Feb 2023 11:09:51 AM

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை

சென்னை: பாதிப்படைந்த நெல் குறித்த ஆய்வு செய்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை ...... தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் பெய்த மழையால் தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் பயிடப்பட்டிருந்த நெல் பாதிப்படைந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில், சேதமடைந்த நெல் பற்றி ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் சக்ரபாணி, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், ஆய்வுக்கான அறிக்கையை முதல்-அமைச்சரிடம் இன்று சமர்பிக்கின்றனர். இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிப்படைந்த நெல் பற்றிய ஆய்வு செய்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

Tags :