Advertisement

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்

By: vaithegi Mon, 05 Dec 2022 09:09:52 AM

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்

டெல்லி: இன்று டெல்லி பயணம் .... டெல்லி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை தனியாக சந்தித்து தமிழகத்திற்கு தேவையான நிதி குறித்து பேசுவார் என்று விபரமறிந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

ஜி20 மாநாட்டை இந்தியா நடத்த உள்ளதால், அது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்று கொண்டு வருகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் மு.க. ஸ்டாலின் அங்கு பிரதமர் நரேந்திர மோடியை தனியாக சந்திக்கிறார்.

chief minister,delhi ,முதல்வர் ,டெல்லி

மேலும் தமிழகத்திற்கு தேவையான பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்துவார் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக, ஜி20 மாநாட்டின் சின்னம் மற்றும் கருப்பொருளை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார்.

இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க வங்கதேசம், எகிப்து, மொரீஷியஸ், நெதர்லாந்து, நைஜீரியா, ஓணம், சிங்கப்பூர், ஸ்பெயின், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2023ம் ஆண்டு டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெறவுள்ளது.இக்கூட்டத்தில் சர்வதேச தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

Tags :