Advertisement

முதல்வர் மு.க ஸ்டாலின் 2 நாள் பயணமாக இன்று மதுரை வருகை

By: vaithegi Sun, 05 Mar 2023 1:07:45 PM

முதல்வர் மு.க ஸ்டாலின் 2 நாள் பயணமாக இன்று மதுரை வருகை


சென்னை: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு பணியை மேற்கொள்ளும் வகையில் முதல்வர் மு.க ஸ்டாலின் “முதல்வர் கள ஆய்வு” என்ற திட்டத்தை கடந்த ஜனவரி மாதம் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ் முதல்வர் அனைத்து மாவட்டங்களிலும் நலத்திட்ட பணிகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.இதனை அடுத்து முதல் கட்டமாக கடந்த பிப்ரவரி மாதம் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் முதல்வர் ஆய்வு நடத்தினார்.

madurai,principal ,மதுரை ,முதல்வர்

அதைத் தொடர்ந்து (மார்ச் 05) அதாவது இன்று முதல்வர் 2 நாள் பயணமாக மதுரை வந்துள்ளார். மதுரையில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக ரூ.13.48 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார். அதை தொடர்ந்து ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

Tags :