Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முதல்வர் மு.க. ஸ்டாலின் உடல் நிலை சீராக உள்ளது..காவேரி மருத்துவமனை அறிக்கை..

முதல்வர் மு.க. ஸ்டாலின் உடல் நிலை சீராக உள்ளது..காவேரி மருத்துவமனை அறிக்கை..

By: Monisha Fri, 15 July 2022 7:27:16 PM

முதல்வர் மு.க. ஸ்டாலின் உடல் நிலை சீராக உள்ளது..காவேரி மருத்துவமனை அறிக்கை..

சென்னை: கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முதல்வர் மு.க ஸ்டாலின் உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. அவர் மேலும் சில நாட்கள் ஓய்வில் இருப்பார் என்றும் அந்த மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12ஆம் தேதி கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.


தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று முன் தினம் மாலை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அவர் ட்விட்டரில் வெளியிட்டிருந்த பதிவில், "இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்' என அவர் குறிப்பிட்டிருந்தார்.

corona,hospital,report,stable ,மு.க. ஸ்டாலின், உடல் நிலை, மருத்துவமனை,கொரோனா,

முதல்வர் உடல் நிலை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்ரமணியன், முதல்வர் நலமுடன் இருப்பதாகவும், அவர் ஓரிரு நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் காவேரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்றைய தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கொரோனா தொற்றுக்கான சிகிச்சைக்கள் அவருக்கு அளிக்கப்பட்டன. அவரது உடல் நலம் நன்கு தேறியுள்ளது. முதல்வர் நலமடைந்து வருகிறார். சில நாட்கள் ஒய்வெடுக்குமாறு கேட்டுக்கொண்டிக்கிறோம் என்றும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|