Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற 4-ந்தேதி டெல்லி பயணம்

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற 4-ந்தேதி டெல்லி பயணம்

By: vaithegi Mon, 28 Nov 2022 12:46:47 PM

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற 4-ந்தேதி டெல்லி பயணம்

சென்னை: வருகிற 4-ந்தேதி டெல்லி பயணம் .... இந்தோனேசியா நாட்டின் பாலிதீவில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் மாநாட்டில் அந்த அமைப்பின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் ஜி-20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை பிரதமர் மோடி வருகிற டிசம்பர் 4-ந்தேதி ஏற்கிறார்.

இதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் ஜி-20 நாடுகளின் மாநாடு நடைபெறுகிறது. இந்நிலையில் ஜி-20 அமைப்பு பற்றி விளக்கவும், அடுத்த ஆண்டு மாநாட்டை நடத்துவது தொடர்பாகவும் மாநில முதல்-மந்திரிகள் கூட்டத்தை டிசம்பர் 5-ந்தேதி டெல்லியில் பிரதமர் மோடி கூட்டியுள்ளார்.

delhi,m.k. stalin ,டெல்லி ,மு.க. ஸ்டாலின்

இதையடுத்து இந்த கூட்டத்தில் பங்கேற்க மாநில முதல்-மந்திரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தாபானர்ஜி தான் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளார். இச்சூழலில் தமிழக முதல்-அமைச்சர் தெரிவித்தன.

எனவே இதற்காக அவர் வருகிற 4-ந்தேதி டெல்லி செல்லலாம் எனவும் 5-ந்தேதி கூட்டத்தை முடித்து விட்டு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகளை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags :
|