Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விவசாயிகளுக்காக நலத்திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் துவங்கி வைப்பு

விவசாயிகளுக்காக நலத்திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் துவங்கி வைப்பு

By: vaithegi Wed, 07 Dec 2022 8:51:48 PM

விவசாயிகளுக்காக நலத்திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் துவங்கி வைப்பு

சென்னை: கடந்த வருடம் முதல் முறையாக வேளாண் துறைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் வேளாண்மை துறையை மேம்படுத்தும் வாயிலான சிறந்த திட்டங்கள் இடம்பெற்றது. இவை விவசாயிகள் மத்தியில் வரவேற்பையும் பெற்றது. இதனை அடுத்து அதன் தொடர்ச்சியாக தற்போது விவசாய நலனுக்காக ரூபாய் 15.40 கோடி ரூபாய் செலவில் வேளாண் துறைக்காக புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.

இதனை இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். மேலும் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட பல திட்டங்களை துவக்கி வைத்தார். மேலும் நெல்லுக்கு பின் பயிர் சாகுபடி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிர் விதைகளை வழங்கினார்.

m.k. stalin,peasants ,மு.க. ஸ்டாலின்,விவசாயிகள்

மேலும் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி கரும்பு சாகுபடி செய்த விவசாயிகளுக்கு நியாயமான மற்றும் ஆதார விதை காட்டிலும் டன்னுக்கு ரூ.195 சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதற்கான ஆணைகளையும் வழங்கினார்.

இதனை அடுத்து அத்துடன் சென்னையில் 40 லட்சம் ரூபாய் செலவில் 20 நடமாடும் காய்கறி அங்காடிகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். எனவே இதன் மூலம் பொதுமக்கள் வீடுகளில் இருந்து காய்கறிகளை குறைந்த விலையில் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 19.16 லட்சம் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.

Tags :