Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டங்களை அறிவித்தார்

சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டங்களை அறிவித்தார்

By: vaithegi Tue, 15 Aug 2023 11:19:48 AM

சுதந்திர தின விழாவில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டங்களை அறிவித்தார்

சென்னை: சுதந்திர உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் , இந்தியா என்பது எல்லைகளால் அல்ல, எண்ணங்களால் வடிவமைக்கப்பட வேண்டும்.அனைவரும் விரும்புவது சமத்துவ, சகோதரத்துவ, சமதர்ம இந்தியா .சமூக நீதி, சமத்துவத்தின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. ஏற்ற தாழ்வற்ற அரசை தமிழ்நாட்டில் நடத்தி கொண்டு வருகிறோம்.

மேலும் ஒரு கோடி மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படவுள்ளது . உழைக்கும் பெண்களுக்கான அங்கீகாரமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது இலவச பேருந்து பயணத்தின் மூலம் பெண்களால் மாதம் ரூ. 850 சேமிக்க முடிகிறது என்றார்.மேலும் அத்துடன் சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டங்களை அறிவித்தார்,இதையடுத்து அறிவித்த புதிய திட்டங்கள் இதோ :-

chief minister m.k.stalin,independence day celebrations,new projects ,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ,சுதந்திர தின விழா, புதிய திட்டங்கள்


பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்திற்கு விடியல் பயணம் என்று பெயர் சூட்டப்படுகிறது. சொமோட்டோ, ஸ்விகி, உபேர் உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் நலனை பாதுகாக்க தனி நல வாரியம் அமைக்கப்படும். பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் புதிய ஆட்டோ வாங்க ஒரு லட்சம் மானியம் வழங்கும் திட்டம்; மேலும் 500 மகளிர் பயன்பெறும் வகையிலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும். சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள செங்காந்தள் பூங்காவிற்கு அருகே உள்ள 6.9 ஏக்கர் நிலத்தில் 25 கோடி செலவில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்படும். காலை உணவு திட்டம் அனைத்து ஆரம்ப பள்ளிகளுக்கும் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் விரிவுபடுத்தப்படும் பல்வேறு அரசு துறைகளில் 55,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

Tags :