Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

By: vaithegi Sat, 24 Dec 2022 11:52:41 AM

இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

சென்னை: மாவட்ட ஆட்சியர்களுக்கான அறிவுறுத்தல் .... தமிழ்நாட்டில் 29.10.2022 முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்து பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழைப் பெய்து கொண்டு வருகிறது. இதையடுத்து தென் மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் நாகப்பட்டினத்திற்கு கிழக்கே 480 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 540 கி.மீ. தொலைவில் ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது என்றும், அடுத்த 48 மணி நேரத்தில் இது மேற்கு தென்மேற்கு திசையில் குமரிக் கடல் பகுதியை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே இதன்காரணமாக வரும் 25 ஆம் தேதி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழைப் பெய்யக் கூடும் என்றும், 26 ஆம் தேதி தேனி, தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழைப் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

m. k. stalin,district collectors , மு.க.ஸ்டாலின்,மாவட்ட ஆட்சியர்கள்

இதனை அடுத்து தமிழ்நாட்டில் எதிர்வரும் கனமழையினை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், அணைகள் மற்றும் நீர்த்தேங்களில் நீர் இருப்பு, நீர் வரத்து ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.

மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும். நிவாரண முகாம்களில் உணவு, குடிநீர், மருத்துவ அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதற்கு இடையே தேசிய பேரிடர் மீட்புப்படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மைத்துறை அறிவித்துள்ளது.

Tags :