Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் அயராது பணியாற்றிய ஊழியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் அயராது பணியாற்றிய ஊழியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி

By: vaithegi Sat, 16 Sept 2023 10:29:18 AM

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் அயராது பணியாற்றிய ஊழியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி


சென்னை: கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அதன்படி காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 115-வது பிறந்த நாளையொட்டி கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து இது தொடார்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மிகக் குறுகிய காலத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளைக் கண்டறிவதற்கு அயராது உழைத்திட்ட அனைவரையும் இத்தருணத்தில் பாராட்டி மகிழ்கிறேன்.

chief minister m.k.stalin,artist womens rights , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,கலைஞர் மகளிர் உரிமை


இந்த திட்டத்தில் களப்பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் தன்னார்வலர்கள், சுய உதவிக் குழு உறுப்பினர்கள், நியாய விலைக் கடைப் பணியாளர்கள், நகராட்சி - மாநகராட்சிப் பணியாளர்கள்,

அனைத்து அரசு துறை அலுவலர்களையும் இந்த திட்ட நிகழ்வின் வெற்றியில் பாராட்டி மகிழ்கிறேன். களப்பணியாளர்களை வழிநடத்திய மாவட்ட ஆட்சியர்கள், அரசு செயலாளர்கள், தலைமைச் செயலாளர்கள் வரை உள்ள அனைத்து உயர் அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் என அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

Tags :