Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நெல் பயிர் சேதம், ஒருவாரத்தில் வங்கி கணக்கில் இழப்பீடு வழங்கப்படும் ... முதல்வர் மு.க.ஸ்டாலின்

நெல் பயிர் சேதம், ஒருவாரத்தில் வங்கி கணக்கில் இழப்பீடு வழங்கப்படும் ... முதல்வர் மு.க.ஸ்டாலின்

By: vaithegi Thu, 23 Feb 2023 10:59:38 AM

நெல் பயிர் சேதம், ஒருவாரத்தில் வங்கி கணக்கில் இழப்பீடு வழங்கப்படும்   ... முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: "கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற திட்டத்தின் கீழ், 2 நாள் பயணமாக திருவாரூர் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னார்குடியில் புதிதாக கட்டப்படவுள பேருந்து நிலையத்தின் இடத்தை ஆய்வு செய்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நான் தமிழகத்தினுடைய முதலமைச்சர் பொறுப்பேற்றதற்கு பின்னால் எத்தனையோ மாவட்டங்களுக்கு, எத்தனையோ பகுதிகளுக்கு ஏன்? எத்தனையோ மாநிலங்களுக்கு, ஏன் சில வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் எல்லாம் கிடையாது. அப்படிப்பட்ட வாய்ப்பை பெறும் போது எனக்கு ஏற்படாத மகிழ்ச்சி, இந்த 2 நாட்களாக இந்த திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிற போது எனக்குள்ளது. என்னையே அறியாமல் ஒரு கம்பீரமாக நான் இங்கே இருக்கிறேன்.

principal,paddy crop ,முதல்வர் ,நெல் பயிர்

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் கடந்த 2 ஆண்டு காலமாக 85 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி கொண்டு இருக்கிறோம். இதையடுத்து மிச்சம் இருக்கும் வாக்குறுதி நிறைவேற்றி தருவோம். மேட்டூர் அணை குறித்த காலத்தில் நீர் திறக்கப்படுகிறது. விவசாய பணிகள் சிறந்த முறையில் நடைபெற்று கொண்டு வருகிறது. விவசாயிக்கு தனி பட்ஜெட் இந்தாண்டு வெளியிடப்படும்.

தமிழ்நாட்டில் 106 நவீன சேமிப்பு கிடங்கு துவக்கி வைத்துள்ளேன். கள ஆய்வில் முதலமைச்சர் நேரடியாக தெரிந்து கொள்ள மண்டலமாக சென்று கொண்டு இருக்கிறேன். சட்டம், ஒழுங்கு பிரச்சினை பற்றி ஆய்வு நடத்தினேன். திட்டம் அறிவித்துடன் மட்டுமல்லாது தொடர்ந்து கண்காணித்து அனைத்து நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறேன்.

மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், நாகை, திருவாரூர், கடலூர், தஞ்சாவூர் அமைச்சர்களை கொண்டு ஆய்வு நடத்தி, மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினேன். கடந்த மாதம் தொடர் மழையின் காரணமாக அறுவடை பாதிக்கப்பட்ட பயிர்கள் கணக்கெடுப்பு பணி நிறைவடைந்து விட்டது. ஒரு வாரத்தில் வங்கி கணக்கில் தொகை வர வைக்கப்படும்” என அவர் உறுதி அளித்தார்.

Tags :