Advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கேரளாவுக்கு பயணம்

By: vaithegi Sat, 01 Apr 2023 11:37:42 AM

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கேரளாவுக்கு பயணம்

சென்னை: கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் உள்ள மகாதேவர் கோவிலைச் சுற்றிலும் அமைந்துள்ள தெருக்களில், ஒடுக்கப்பட்டவர்கள் நடக்க தடை இருந்துவந்தது. இதை எதிர்த்து 1924-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதி மாபெரும் போராட்டம் நடைபெற்றது. டி.கே.மாதவன் தொடங்கிய இப்போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

ஆகையால் போராட்டத்தை தொடர தலைவர்கள் இல்லாமல் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது. கேரளத் தலைவர்களின் அழைப்பின் பேரில், அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த பெரியார் வைக்கம் சென்று, அந்தப் போராட்டத்திற்குத் தலைமை ஏற்றார்.

kerala,chief minister , கேரளா,முதலமைச்சர்

பல நாட்கள் அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றார். இந்த போராட்டத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்ற பெரியார் , வைக்கம் வீரர் என்ற பட்டத்தையும் பெற்றார். தற்போது இப்போராட்டத்தின் நூற்றாண்டு விழா கேரள அரசு சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் பங்கேற்குமாறு கேரள அரசு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தது.

எனவே அதன்படி இந்நிகழ்ச்சில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கேரள மாநிலம் கொச்சிக்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு வைக்கம் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு நாளை மீண்டும் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|