Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகளிருக்கான உரிமைத்தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

மகளிருக்கான உரிமைத்தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

By: vaithegi Fri, 07 July 2023 09:55:40 AM

மகளிருக்கான உரிமைத்தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

சென்னை: கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது, குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. அதன் பின்னர் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் இத்திட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வியெழுப்பி வருகின்றன. 2 ஆண்டுகள் ஆகியும் மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படவில்லை எனவும் சாடிவருகின்றன.

இதற்கு இடையே குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை அண்ணா பிறந்தநாளான வருகிற செப்டம்பர் 15ம் தேதி முதல் வழங்கப்படும் என கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.எனவே இதற்காக இந்தாண்டு பட்ஜெட்டில் ரூ. 7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

chief minister,entitlement for daughter ,முதலமைச்சர் ,மகளிருக்கான உரிமைத்தொகை

இந்த நிலையில் இன்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருக்கிறார். சென்னை தலைமை செயலகத்தில் பிற்பகல் 3 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் அவர் ஆலோசனை நடத்துகிறார்.

இதையடுத்து இக்கூட்டத்தின் முடிவில் குடும்பத் தலைவிகள் யார்-யார் உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள், எப்போது உரிமைத்தொகை கிடைக்கப்பெறும், அதற்கான விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :