Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செந்தில் பாலாஜி நீக்கிய ஆளுநரின் முடிவு தொடர்பாக ... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

செந்தில் பாலாஜி நீக்கிய ஆளுநரின் முடிவு தொடர்பாக ... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

By: vaithegi Fri, 30 June 2023 09:55:33 AM

செந்தில் பாலாஜி நீக்கிய ஆளுநரின்  முடிவு தொடர்பாக  ...  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து உடனடியாக நீக்குவதாக நேற்று இரவு ஆளுநர் அலுவலகம் தரப்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து இதற்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, விசிக உள்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து கொண்டு வருகின்றன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பலதலைவர்கள் ஆளுநரின் நடவடிக்கையை கடுமையாக சாடி கொண்டு வருகின்றனர். இதற்கு இடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. நிறுத்தி வைத்து உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

chief minister m. k. stalin,senthil balaji ,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,செந்தில் பாலாஜி

இதனை அடுத்து இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை பெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அத்துடன் பதவி நீக்க உத்தரவை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், செந்தில் பாலாஜி நீக்கம் செய்யப்பட்டது மற்றும் அந்த உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் சட்ட வல்லுநர்கள், மூத்த அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.

Tags :