Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திமுக மகளிரணி சார்பில் வினாடி வினா போட்டி ...முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திமுக மகளிரணி சார்பில் வினாடி வினா போட்டி ...முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

By: vaithegi Sun, 03 Sept 2023 4:00:58 PM

திமுக மகளிரணி சார்பில் வினாடி வினா போட்டி   ...முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் கழக மகளிரணி சார்பில் தங்கை கனிமொழி முன்னெடுக்கும் #கலைஞர்100-இல் வினாடி - வினாப் போட்டி முயற்சி பாராட்டத்தக்கது.

எனவே வருகிற செப்டம்பர் 15-ஆம் நாள் தொடங்கவுள்ள உள்ள வினாடி வினாப் போட்டிக்கு இப்போதிலிருந்தே தயாராகுங்கள் என அவர் குறிப்பிட்டு உள்ளார்.

chief minister m.k.stalin,quiz competition,dmk ,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , வினாடி வினா போட்டி  ,திமுக


இதேபோன்று திமுக எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, அறிவியக்கமாக வாழ்ந்து வழிகாட்டிய தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டில், திராவிட இயக்கத்தின் கொள்கைகளையும் வரலாற்றுச் சிறப்புகளையும் முற்றிலும் புதிய பரிமாணத்தில் எடுத்துச் செல்லும் முயற்சி

‘கலைஞர் 100 - வினாடி வினா’போட்டி! வரும் செப்டம்பர் 15 அன்று துவங்கவுள்ள நிகழ்வுக்கு, இன்று முதல் உங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். இந்நிகழ்வைத் துவங்கி வைக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என அவர் குறிப்பிட்டு உள்ளார்.



Tags :