Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீட் தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

நீட் தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

By: vaithegi Tue, 15 Aug 2023 09:43:44 AM

நீட் தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை : நீட் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி கடிதம் ... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதையடுத்து அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மருத்துவப்‌ படிப்புகளில்‌ சேருவதற்கான தேசிய தகுதி மற்றும்‌ நுழைவுத்‌ தேர்வை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து வருவதாகவும்‌, நீட்‌ தேர்வில்‌ பெறும்‌ மதிப்பெண்கள்‌ அடிப்படையிலான மருத்துவச்‌ சேர்க்கை, நகர்ப்புற மாணவர்களுக்கும்‌, அதிக கட்டணம்‌ செலுத்தி பயிற்சி பெறக்கூடிய மாணவர்களுக்குமே சாதகமாக உள்ளது எனவும், அடிப்படையிலேயே ஏழை எளிய மாணவர்களுக்கு எதிரானதாக இத்‌தேர்வு முறை உள்ளது எனவும் தெரிவித்து உ`ள்ள மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌, நீட்‌ போன்ற நுழைவுத்‌ தேர்வின்‌ அடிப்படையில்‌ சேர்க்கை நடைபெறுவதை விட, பிளஸ்‌ 2 மதிப்பெண்கள்‌ அடிப்படையில்‌ மட்டுமே சேர்க்கை நடைபெற வேண்டுமென்றும்‌, நுழைவுத்‌ தேர்வு முறை மாணவர்களுக்குத்‌ தேவையற்ற கூடுதல்‌ சுமையை ஏற்படுத்தும்‌ என்பது தமிழ்நாட்டின்‌ கருத்தாக உள்ளது என்றும்‌ தெரிவித்துள்ளார்‌.

நீட்‌ அடிப்படையிலான மாணவர்‌ சேர்க்கை செயல்முறை, ஏழை மற்றும்‌ கிராமப்புற மாணவர்களுக்கு நீட்‌ தேர்வினால்‌ ஏற்படும்‌ பாதகமான விளைவுகள்‌ ஆகியவை குறித்து ஆராய்ந்திட, உயர்நீதிமன்ற முன்னாள்‌ நீதியரசர்‌ திரு. ஏ.கே. ராஜன்‌ அவர்கள்‌ தலைமையில்‌ குழு அமைக்கப்பட்டு, அக்குழு விரிவான ஆய்வை மேற்கொண்டு, தீர்வுகள்‌ குறித்த தனது பரிந்துரைகளைச்‌ சமர்ப்பித்ததாகவும்‌, இக்‌குழுவின்‌ அறிக்கை மற்றும்‌ பல்வேறு விவாதங்களின்‌ அடிப்படையில்‌, தமிழ்நாடு இளநிலை மருத்துவப்‌ படிப்புகளுக்கான சேர்க்கை சட்டமுன்வடிவு, 2021 (சட்டமன்றப்‌ பேரவை சட்டமுன்வடிவு எண்‌ 43/2021), தமிழ்நாடு சட்டமன்றத்தில்‌ 13-9-2021 அன்று நிறைவேற்றப்பட்டு,

chief minister m.k.stalin,neet,republic president draupadi ,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,நீட் ,குடியரசுத் தலைவர் திரௌபதி


18-9-2021 அன்று மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பப்பட்டதாகவும்‌ தெரிவித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌, மாண்புமிகு ஆளுநரால்‌ ஐந்து மாத காலத்திற்குப்‌ பிறகு இச்சட்டமுன்வடிவு திருப்பி அனுப்பப்பட்டதாகவும்‌, 8-2-2022 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில்‌ மீண்டும்‌ இந்த சட்டமுன்வடிவு அறிமுகப்படுத்தப்பட்டு, மறுபரிசீலனைக்குப்‌ பிறகு மீண்டும்‌ நிறைவேற்றப்பட்டு, மாண்புமிகு குடியரசுத்‌ தலைவரின்‌ ஒப்புதல்‌ பெறுவதற்கு ஏதுவாக மாண்புமிகு ஆளுநருக்கு மீண்டும்‌ அனுப்பப்பட்டதாகவும்‌, மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர்‌ அவர்கள்‌, இந்த மசோதாவை ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி, தற்போது நிலுவையில்‌ உள்ளதாகவும்‌ குறிப்பிட்டுள்ளார்‌.

தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவை நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவு தொடர்பாக, ஒன்றிய சுகாதாரம்‌ மற்றும்‌ குடும்ப நல அமைச்சகம்‌ 21-6-2022 அன்று கோரியிருந்த விளக்கங்கள்‌, ஒன்றிய உயர்கல்வி அமைச்சகம்‌ 26.08.2022, 15.05.2023 ஆகிய தேதிகளில்‌ கோரியிருந்த விளக்கங்கள்‌, ஒன்றிய ஆயுஷ்‌ அமைச்சகம்‌ 13.01.2023 அன்று கோரியிருந்த விளக்கங்கள்‌, ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின்‌ மூலம்‌ பெறப்பட்டதாகத்‌ தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌, ஒன்றிய அமைச்சகங்கள்‌ கோரியிருந்த அனைத்து விவரங்களையும்‌ தமிழ்நாடு அரசு விரைவாக வழங்கியதாகவும்‌ தனது கடிதத்தில்‌ அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்‌.

Tags :
|