Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விழுப்புரம், திருப்பூர் மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்களை அமைப்பதற்கு முதல்வர் முக ஸ்டாலின் இன்று (ஜூன் 24) அடிக்கல் நாட்டல்

விழுப்புரம், திருப்பூர் மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்களை அமைப்பதற்கு முதல்வர் முக ஸ்டாலின் இன்று (ஜூன் 24) அடிக்கல் நாட்டல்

By: vaithegi Fri, 24 June 2022 9:05:26 PM

விழுப்புரம், திருப்பூர் மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்களை அமைப்பதற்கு  முதல்வர் முக ஸ்டாலின் இன்று (ஜூன் 24) அடிக்கல் நாட்டல்

தமிழகம்: தமிழகத்தில் தகவல் தொழில் நுட்பத்தை இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கு கொண்டு செல்லும் வகையில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், இந்த பூங்காக்கள் முதல் கட்டமாக தூத்துக்குடி, வேலுார், விழுப்புரம் மற்றும் திருப்பூர் நகரங்களில் ஏற்படுத்தப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, இந்த மினி டைடல் பூங்காக்கள் சுமார் 50,000 முதல் 1,00,000 சதுர அடி பரப்பளவில் சுமார் 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட இருப்பதாகவும் தகவல் ஒன்று வெளியானது.

mini tidal park,cm ,மினி டைடல் பூங்கா,முதல்வர்

இந்த நிலையில் விழுப்புரம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்களை அமைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் இன்று (ஜூன் 24) துவங்கி இருக்கிறது.

அந்த வகையில் தற்போது விழுப்புரம், திருப்பூர் மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்களை அமைப்பதற்காக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டி இருக்கிறார்.

இந்நிகழ்வை தொடர்ந்து சென்னை தரமணி டைடல் பார்க்கில் புதிதாக கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி முறைக்கான மையத்தையும் அவர் திறந்து வைத்தார். தொடர்ந்து நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சி முதிர்வு கணக்கெடுப்பையும் முதல்வர் முக ஸ்டாலின் இன்று துவங்கி வைத்திருக்கிறார்.

Tags :