Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஹிமாச்சல பிரதேசத்தில் ஊரடங்கை ஜுன் இறுதி வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார் முதல்வர்

ஹிமாச்சல பிரதேசத்தில் ஊரடங்கை ஜுன் இறுதி வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார் முதல்வர்

By: Nagaraj Tue, 26 May 2020 3:01:09 PM

ஹிமாச்சல பிரதேசத்தில் ஊரடங்கை ஜுன் இறுதி வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார் முதல்வர்

சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கையை அடுத்து ஹிமாச்சல பிரதேசத்தில் ஊரடங்கை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்து முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, இந்த மாத இறுதி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு உள்ளது. ஹிமாச்சலில் இதுவரை, 214 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து பேர் இறந்துள்ளனர். 63 பேர், குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

curfew,health professionals,alert,state government ,ஊரடங்கு, சுகாதார நிபுணர்கள், எச்சரிக்கை, மாநில அரசு

அதிகபட்சமாக, ஹமிர்பூரில், 63 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நான்காம் கட்ட ஊரடங்கு, வரும், 31ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், ஊரடங்கை, மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்து, முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் உத்தரவிட்டார். இதன்படி, வரும், ஜூன், 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கை தளர்த்தினால், வைரஸ், சமூக பரவலாக மாறி விடும் என, சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளதால், ஊரடங்கை நீட்டித்துள்ளதாக, மாநில அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|