Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது; தமிழக முதல்வர்

தமிழகத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது; தமிழக முதல்வர்

By: Monisha Mon, 10 Aug 2020 5:11:27 PM

தமிழகத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது; தமிழக முதல்வர்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கடந்த சில தினங்களாக மதுரை, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, சேலம் ஆகிய மாவட்டங்களில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனையின் போது அவர் பேசியதாவது:- தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கின்றன. கள்ளக்குறிச்சியில் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பான நடவடிக்கையால் வைரஸ் தொற்று கட்டுக்குள் உள்ளது. கொரோனாவால் தமிழகத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

tamil nadu,cm edappadi palanisamy,natural life,vulnerability,farmers ,தமிழ்நாடு,முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,இயல்பு வாழ்க்கை,பாதிப்பு,விவசாயிகள்

விவசாயிகள் எப்போது பாதிக்கப்பட்டாலும் அதிமுக அரசு நேசக் கரம் நீட்டி உதவும். விவசாயிகளுக்கு தேவையான உதவிகள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பொருட்களை பாதுகாத்து விற்பனை செய்ய நடவடிக்கை. விவசாயிகளுக்கு பல்வேறு வகையான மானியங்கள் வழங்கப்படுகின்றன. கால்நடை பூங்கா விவசாயிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

பருவமழை நீர் வீணாகாமல் தடுக்க தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன. மக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவாக தீர்வு காணப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

Tags :